Breaking
Mon. Dec 23rd, 2024

மீரி­ய­பெத்­தையில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு அடுத்த ஜன­வரி மாதத்­திற்குள் வீடுகள் நிர்­மா­ணித்துக் கொடுக்­கப்­படும். இது தொடர்பில் நில­விய அனைத்து குறை­பா­டு­களும் நிவர்த்தி செய்­யப்­பட்­டுள்­ள­தாக இடர் முகா­மைத்­துவ அமைச்சர் அநுர பிரி­ய­தர்­ஸ­ன­ யாப்பா தெரி­வித்தார்.

அர­சியல் மாற்­றத்தின் கார­ணத்­தி­னா­லேயே இவ்­வி­ட­யத்தில் கால­தா­மதம் ஏற்­பட்­ட­தா­கவும் அமைச்சர் சபையில் தெரி­வித்தார்.பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை கண்டி மாவட்ட ஐக்­கிய தேசிய கட்சி எம்.பி. வேலு­கு­மா­ரினால் மீரி­ய­பெத்தை மற்றும் மலை­யக மண்­ச­ரி­வுகள் தொடர்­பாக முன்­வைத்த சபை ஒத்தி வைப்பு பிரே­ர­ணைக்கு பதி­ல­ளித்து சபையில் உரை­யாற்றும் போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அமைச்சர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,

மீரி­ய­பெத்தை மண்­ச­ரி­வினால் பாதிக்­கப்­பட்டு வீடு­களை இழந்­த­வர்­க­ளுக்கு அதனை நிர்­மா­ணித்துக் கொடுப்­பது தொடர்பில் நிர்­மாணப் பணி­களில் ஈடு­பட்­டுள்ள நிறு­வ­னங்­களை இன்று எமது அமைச்­சுடன் இணைத்துக் கொண்டு வேலைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

கடந்த காலங்­களில் அர­சியல் மாற்­றங்கள் கார­ண­மா­கவே வீடு­களை அமைப்­பதில் தாமதம் ஏற்­பட்­டது. அத்­தோடு காணியும் தேவைப்­பட்­டது. தற்­போது 2 ஏக்கர் காணி கிடைத்­துள்­ள­தோடு, வீடு­களை கட்­டு­வ­தற்­கான பற்­றாக்­கு­றையும் தீர்க்­கப்­பட்­டுள்­ளது.

எனவே அடுத்த ஆண்டு ஜன­வரி மாதத்­திற்குள் பாதிக்­கப்­பட்ட அனைத்து மக்­க­ளுக்கும் வீடுகள் அமைத்துக் கொடுக்­கப்­படும். ஜன­வ­ரியில் வீடுகள் அமைத்துக் கொடுக்கும் பணிகள் பூர்த்­தி­யாகும். அதற்கு அர­சியல் பேதங்கள் பாராது அனை­வரும் ஒத்­து­ழைக்க வேண்டும்.

இவ்­வி­ட­யத்தில் இன, மத பேதங்­க­ளுக்கு அப்­பாற்­பட்டே எமது செயற்­பா­டுகள் அமையும். அதிக மழை ஒரே இடத்தில் தொடர்­வ­தாலும் கால­நிலை மாற்­றங்­களினாலும் மண்­ச­ரி­வு­களும் ஏற்­ப­டு­கி­றது.

கண்டி,பதுளை, காலி, தெனி­யாய, அம்­பாந்­தோட்டை, மாத்­தளை உட்­பட பல மாவட்­டங்­களில் மண்­ச­ரிவு ஏற்­படும் அடை­யாளம் காணப்­பட்­டுள்­ளது.தேசிய கட்­ட­டங்கள் ஆய்வு நிலையம் இவ்­வா­றான இடங்கள் அடை­யாளம் கண்­டுள்­ள­தோடு அவ்­வா­றான பிர­தே­சங்­களில் வாழும் மக்­க­ளுக்கு எச்­ச­ரிக்­கையும் விடுக்­கப்­பட்­டுள்­ளது.

உலகம் வெப்ப மய­மாக்கல், காட­ழிப்பு, மரம் வெட்­டுதல் போன்ற கார­ணங்­க­ளி­னாலும் மண்­ச­ரி­வுகள் ஏற்­ப­டு­கின்­றன.மண்சரிவுகள் இடம்பெறும் இடங்களில் வாழும் மக்களுக்கு வேறு இடங்களில் வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட வேண்டும். அதற்காக வீடமைப்பு அமைச்சுடன் இணைந்து எதிர்காலத்தில் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

By

Related Post