Breaking
Mon. Dec 23rd, 2024
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா­அத்தின் தலை­வரும் பிர­பல தென்­னிந்­திய இஸ்­லா­மிய பிர­சா­ர­க­ரு­மான பி.ஜே.என்­ற­றி­யப்­படும் பி.ஜெய்­னு­லாப்­தீனின் இலங்கை விஜயம் இறுதி நேரத்தில் ரத்துச் செய்யப்பட்டுள்ளது. இது விட­யத்தில் தமக்கு அநீதி இழைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் தவ­றான தக­வல்­களை முன்­வைத்து அவ­ரது வரு­கையை தடுத்து நிறுத்­தி­ய­வர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­க­வுள்­ள­தா­கவும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் தெரி­வித்­துள்­ளது.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் ஏற்­பாட்டில் கொழும்பு சுக­த­தாச உள்­ளக அரங்கில் நேற்று மாலை நடை­பெற்ற அல்­குர்ஆன் சிங்­கள மொழி­பெ­யர்ப்பு வெளி­யீட்டு நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்­புரை நிகழ்த்­து­வ­தற்­காக பி.ஜே. இலங்­கைக்கு வருகை தர ஏற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தன.

எனினும் அவ­ரது வருகை தொடர்பில் முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் சிலரும் அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா உட்­பட இஸ்­லா­மிய நிறு­வ­னங்கள் சிலவும் எதிர்ப்பு வெளி­யிட்­டி­ருந்­த­துடன் பாது­காப்பு அமைச்சில் முறைப்­பா­டு­க­ளையும் முன்­வைத்­தி­ருந்­தனர்.

இந் நிலை­யி­லேயே அவ­ரது விஜயம் இறுதி நேரத்தில் இரத்துச் செய்­யப்­பட்­ட­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. எனினும் அவர் குறித்த நிகழ்வில் நேற்­றி­ரவு இணை­யத்­தளம் வழி­யாக நேரடி உரை­யாற்­று­வ­தற்­கான ஏற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தன.

இந்த விவ­காரம் தொடர்பில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் துணைச் செய­லாளர் எம்.எப்.எம்.ரஸ்மின்  கருத்து வெளி­யி­டு­கையில்,

” சகோ­தரர் பி.ஜே. யின் இலங்கை விஜயம் தொடர்பில் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சும் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளமும் எழுத்து மூல அனு­மதி வழங்கி இருந்­தன. அவர்கள் எமது குர்ஆன் மொழி பெயர்ப்பு தொடர்­பிலும் எந்­த­வித ஆட்­சே­ப­னை­க­ளையும் தெரி­விக்­க­வில்லை.

இந்த ஆவ­ணங்­களை சமர்ப்­பித்தே நாம் அவ­ருக்­கான விசா­வுக்கு விண்­ணப்­பித்­தி­ருந்தோம்.

இதற்­க­மைய அவர் இலங்கை வரு­வ­தற்­கான விசா அனு­மதி குடி­வ­ரவு குடி­ய­கல்வு திணைக்­க­ளத்­தினால் முன்­கூட்­டியே வழங்­கப்­பட்­டி­ருந்­தது.

எனினும் அவ­ரது வரு­கையை விரும்­பாத ஒரு சில அர­சி­யல்­வா­தி­களும் அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா உள்­ளிட்ட அமைப்­பு­களும் எதிர்ப்­புக்­களை வெளி­யிட்­ட­துடன் பாது­காப்பு அமைச்­சுக்கும் முறைப்­பா­டு­களை தெரி­வித்­தி­ருந்­தனர். மக்­களை பிழை­யாக வழி­ந­டாத்தும் வகையில் பொறுப்­பற்ற அறிக்­கை­க­ளையும் விடுத்­தி­ருந்­தனர்.

இத­னை­ய­டுத்து பி.ஜே.யின் வரு­கைக்கு அனு­மதி வழங்க வேண்டாம் என குடி­வ­ரவு குடி­ய­கல்வு கட்­டுப்­பாட்டு அதி­கா­ரிக்கு பாது­காப்பு அமைச்சின் செய­லாளர் கடிதம் மூலம் அறி­வித்­த­தாக அறி­கிறோம். இதன் பிர­திகள் சமூக ஊட­கங்கள் வாயி­லா­கவும் வெளி­யி­டப்­பட்­டி­ருந்­தன.

இந்­நி­லையில் நேற்று முன்­தினம் இரவு குடி­வ­ரவு குடி­ய­கல்வு அலு­வ­லகம் மின்­னஞ்சல் மூல­மாக பி.ஜே. அவர்­க­ளுக்கு வழங்­கப்­பட்ட விசாவை இரத்துச் செய்­யு­மாறு தமக்கு ஆலோ­சனை வழங்­கப்­பட்­டுள்­ள­தாக எமக்கு அறி­வித்­தி­ருந்தார்.

ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாத்தின் அல் குர்ஆன் சிங்­கள தொழி­பெ­யர்ப்பு வெளி­யீட்டு நிகழ்வு பல சவால்­க­ளுக்கு மத்­தியில் நேற்று மாலை கொழும்பு சுக­த­தாச உள்­ளக அரங்கில் மிக விம­ரி­சை­யாக நடை­பெற்­றது.

ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாத்தின் தலைவர் முஹம்மத் றியாழ் தலை­மையில் நடை­பெற்ற இந்­நி­கழ்வில் அர­சியல் வாதிகள் சட்­டத்­த­ர­ணிகள் உல­மாக்கள் என ஆயி­ரக்­க­ணக்­கான மக்கள் கலந்து கொண்­டி­ருந்­தனா்.

மாலை 4.15மணிக்கு ஆரம்­ப­மான நிகழ்வின் ஆரம்ப நிகழ்ச்­சி­யாக ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாத்தின் தலைவர் முஹம்மத் றியாழ் தலைமை உரை நிகழ்த்­தினார்.அத­னைத்­தொ­டர்ந்து துணைத்­த­லைவா் மௌலவி பா்ஸான் இளை­ஞா்­களின் எதிர்­காலம், துணைச்­செ­ய­ளாலா் மௌலவி ரஸ்மின் புரட்­சிப்­பா­தையில் தௌஹீத் ஜமாத் என்ற தலைப்­பு­களில் உரை­யாற்­றினார்..

அல் குர்ஆன் சிங்­கள தொழி­பெ­யர்ப்­பா­ளரும் ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாத்தின் செயலாளருமான அப்துா் ராஸிக் அல் குா்ஆன் ஏன் மொழி பெயா்க்கப்படவேண்டும் என்ற தலைப்பில் சிங்கள மொழியில் உரையாற்றினார்.

அதனைத்தொடா்ர்ந்து குர்ஆன் சிங்கள தொழிபெயர்ப்பு வெ ளியிட்டு வைக்கப்பட்டது.நூலின் முதல் பிரதியை ஜக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுா் ரஹ்மான் பெற்றுக்கொண்டார்.

By

Related Post