Breaking
Fri. Mar 14th, 2025

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது பாகிஸ்தான் வீரர் ஷேஜாத் இலங்கை வீரர் டில்ஷானிடம் இஸ்லாம் மதம் பற்றி கூறியது பற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியின் போது பாகிஸ்தான் வீரர் அகமட் ஷேஜாத் இலங்கை வீரர் திலகரட்ண டில்ஷானிடன் இஸ்லாமிய மதம் பற்றிக் கூறியது என்ன என்பதை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை விசாரித்து வருகிறது.
இது குறித்து செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள விவரம் வருமாறு,
கடந்த சனிக்கிழமை நடந்த ஒருநாள் போட்டி முடிந்தவுடன் அரங்கு நோக்கி இரு அணி வீரர்களும் திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது பாகிஸ்தான் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அகமட் ஷேஜாத், இலங்கை வீரர் டில்ஷானிடம் இஸ்லாம் பற்றிக் கூறியது கெமராவில் பதிவாகியுள்ளது.
ஷேஜாத் கூறியது இதுதான் என்கிறது அந்த பதிவு: “முஸ்லிம் அல்லாத நீங்கள், முஸ்லிமாக மாறிவிட்டால், வாழ்க்கையில் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது முக்கியமல்ல, நேரடியாக சொர்க்கம்தான்” என்று கூறியதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதற்கு டில்ஷான் என்ன பதில் கூறினார் என்பது ‘சரியாகக் கேட்கவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷேஜாத் எதற்காக இதனைக் கூறினார் என்று அவரிடம் கேட்டபோது, நானும் தில்ஷானும் நட்புரீதியாக பேசிக்கொண்டோம் என்று கூறியுள்ளார். இதனையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் விசாரணை செய்து வருகிறது.
(VK)

Related Post