– பி.எம்.எம்.ஏ.காதர் –
கிழக்கில் காட்டு யானை அச்சுறுத்தலை நிறுத்த துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் குறிப்பாக கிழக்கு மாகாணத்தின் மட்டு,அம்பாறை மாவட்டங்களில் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்து காணப்படுகிறது காட்டு யானைகளின் தாக்கத்தினால் பலர் உயிர் இழந்துள்ளனர் இது விடயத்தில் அவசரமாக நடவடிக்கை எடுத்து காட்டு யானைகளின் அச்சுறுத்தலில் இருந்து கிழக்கு மாகாண மக்களை காப்பாற்ற ஆவன செய்ய வேண்டும் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் வனவளத்துறை அமைச்சர் யவிக்ரம பெரேராவிடம் எழுத்து மூலமான வேண்டுகோளை விடுத்துள்ளார்.
அண்மைக்காலமாக கிழக்கில் குறிப்பாக மட்டு அம்பாறை மாவட்டங்களில் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்து காணப்படுகிறது இது தொடர்பாக பொது மக்கள் பிரதி அமைச்சரிடம் பல முறை முறைப்பாடு செய்துள்ளனர் இது தொடர்பாக பாராளுமன்றத்தில் வைத்தும் வனவளத்துறை அமைச்சரிடம் மூன்று தடவை பிரதி அமைச்சர் அமீர் அலி கதைத்துள்ளார்.
இப்போது வழக்கத்திற்கு மாறாக காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்து இருப்பதோடு பல உயிர்கள் காவு கொள்ளப்பட்டுள்ளது அத்தோடு பலரின் வீடு சொத்துகளுக்கும் பாரிய சேதம் ஏற்பட்டு வருகிறது இதனை கட்டுப்பாட்டில் கொண்டுவராமல் விடுவோமானால் மட்டு அம்பாறை மாவட்டங்களில் எதிர்காலத்தில் ஏழை விவசாயிகளின் வாழ்க்கை கேள்விக்குறியாக மாறிவிடும் அவர்கள் இப்போது தினமும் உயிர் அச்சுறுத்தலில் வாழ வேண்டிய நிர்பந்தத்தில் வாழ்கின்றார்கள்
இந்த நிலையை மாற்ற வேண்டிய கடமை அரசிடமே உள்ளது மக்கள் விரும்பும் மக்கள் நம்பும் ஒரு நல்லாட்சியாக இந்த நல்லாட்சி ஜொலிக்க வேண்டும் எனின் மக்களுக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் எனவே கிழக்கு மாகாண மக்கள் தொடர்ந்தும் அனுபவித்து வரும் காட்டு யானை அஅச்சுறுத்தலில் இருந்து அவர்களை மீட்டெடுக்கும் முகமாக ஆரம்ப கட்ட நடவடிக்கையாக குறிப்பிட்ட பிரதேசங்களில் மின்சார வேலிகள் அமைக்குமாறும் பின்னர் நிரந்தர தீர்வாக அப்பிரதேசங்களுக்கு நீண்ட கால நிரந்தர பாதுகாப்பு வலயத்தை ஏற்படுத்தி தருமாறும் அந்த கடிதத்தில் பிரதி அமைச்சர் குறிப்பிட்டு காட்டி இருந்தார்.
இது தொடர்பில் பிரதி அமைச்சர் மிக நீண்ட கலந்துரைடலை மேற் கொண்டிருந்தார் இதன் போது அமைச்சர் காமினி விக்ரம பெரேரா மிக விரைவில் பிரதி அமைச்சருடன் அந்த பிரதேசக்களுக்கு விஜயம் ஒன்றும் மேற்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார்.