Breaking
Thu. Nov 14th, 2024

உள்ளூரில் உற்பத்திசெய்யக்கூடிய உண வுப்பொருட்களை இறக்குமதி செய்வதன் மூலம் 200 பில்லியன் ரூபாவுக்கும் அதிக மான தொகை செலவாகின்றது. இதனை தடுத்து நிறுத்துவதற்கு உள்ளூர் உற்பத்திகள் ஊக்குவிக்கப்படவேண்டும். இதன் பொரு ட்டு வடக்கு, கிழக்கு உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களுக்கும் விஜயம் மேற்கொண்டு இவ் விடங்கள் தொடர்பில் நேரடியாக ஆராயவுள்ளேன் என ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இதேவேளை உள்ளூர் உணவுப் பொருள் உற்பத்திவேலைத்திட்டத்தை வெற்றி கரமாக முன்னெடுப்பதற்கும் அதன் இலக் குகளை அடைவதற்கும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் முழுமையான பங்களிப்பை வழங்கவேண்டும் என்றும் ஜனாதிபதி இதன் போது வலியுறுத்தியுள்ளார்.வடக்கு கிழக்கு மக்­களின் பிரச்­சி­னை­களை நேர­டி­யாகக் கண்­ட­றி­வ­தற்­காக அங்கு விஜயம் செய்­ய­வுள்ளேன் என்றும் அவர் குறிப்பிட்டார். உணவு உற்­பத்தி தேசிய வேலைத் திட்­டத்தின் முன்­னேற்றம் தொடர்­பாக ஜனா­தி­பதி தலை­மையில் கடந்த திங்­கட்­கி­ழமை ஜனா­தி­பதி மாளி­கையில் இடம்­பெற்ற விசேட கலந்­து­ரை­யா­டலின் போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.
நாட்டில் விவ­சா­யத்தை மேற்­கொள்­ளக்­கூ­டிய ஒவ்­வொரு காணித்­துண்­டையும் விவ­சா­யத்­திற்கு உட்­ப­டுத்தி இலங்­கையில் உற்­பத்தி செய்­யக்­கூ­டிய உணவுவகைகளிலான உற்பத்தியில் தன்­னி­றைவு பெறுவது தொடர்பாக இந்த கலந்துரையாடலின்போது ஆராயப்பட்டுள்ளது.
கலந்துரையாடலில் ஜனா­தி­பதி மேலும் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது, எதிர்­கா­லத்தில் நான் ஒவ்­வொரு மாவட்­டத்திற்கும் விஜயம் செய்து இவ்­வே­லைத்­திட்­டத்தின் செயற்­றிறன் தொடர்பில் ஆரா­ய­வுள்ளேன்.
வடக்கு கிழக்கு மக்­களின் பிரச்­சி­னை­களை நேர­டி­யாகக் கண்­ட­றி­வ­தற்­காக அங்கு விஜயம் செய்­ய­வுள்ளேன்.
உள்­நாட்டு உணவு உற்­பத்­தியை மக்கள் மத்­தியில் ஊக்­கு­விப்­ப­தற்­காக சிறந்த விவ­சா­யி­யை தெரிவு செய்யும் வேலைத்­திட்­டமும் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளது.
தேசிய உணவு உற்­பத்­திக்­கான சந்தை வாய்ப்­புக்­களை பெற்­றுக்­கொ­டுத்தல் மற்றும் விவ­சா­யி­களை பலப்­ப­டுத்­துதல் நட­வ­டிக்­கை­களை கமத்­தொழில் அமைச்சு மற்றும் வர்த்­தக அமைச்­சுடன் கூட்­டி­ணைந்து மேற்­கொள்­வது முக்கியமானதாகும். உண­வு­வ­கை­களை இறக்­கு­மதி செய்­வ­தற்­காக 200 பில்­லியன் ரூபா­வுக்கு அதி­க­மா­ன­தொகை செல­வா­கி­றது. எனவே உள்ளூர் உற்­பத்­தி­களை அதி­க­ரிப்­பதன் மூலம் இதனை தடுக்க முடியும்.
இர­சா­யனப் பொருட்கள், கிருமி நாசி­னிகள் பாவ­னையை குறைத்து சூழ­லுக்கு உகந்த முறை­மை­களை முன்­னெ­டுத்து உள்ளூர் உற்பத்தியை முன்னெடுப்பதே உணவு உற்­பத்தி தேசிய வேலைத்­திட்­டத்தின் நோக்­க­மாகும்.

By

Related Post