Breaking
Fri. Nov 1st, 2024

தனியார் துறை­யி­ன­ருக்­கான ரூபா 2500 சம்­பள உயர்வு வழங்கல் மற்றும் அடிப்­படைச் சம்­பளம் ரூபா 10000 ஆக இருக்க வேண்டும் என்ற விட­யங்கள் சட்­ட­மாக்­கப்­படும் எனத் தெரி­வித்த தொழில் மற்றும் தொழி­லாளர் உற­வுகள் அமைச்சர் ஜோன் சென­வி­ரட்ண.

ஊழியர் சேமா­லாப நிதி, நம்­பிக்கை நிதி இரண்­டையும் இணைத்து ஓய்­வூ­தியத் திட்­ட­மொன்று அறி­மு­கப்­ப­டுத்­த­வுள்­ள­தா­கவும் தெரி­வித்தார். கொழும்பில் நேற்று புதன்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் உரை­யாற்றும்போதே அமைச்சர் ஜோன் சென­வி­ரட்ண இதனை தெரி­வித்தார்.

கடந்த 100 நாள் ஆட்­சியில் நிதி­ய­மைச்சர் அரச துறை­யி­ன­ருக்கும் தனியார் துறை­யி­ன­ருக்கும் ரூபா 2500 சம்­பள உயர்வு வழங்­கப்­பட வேண்­டு­மென வரவு–செலவு திட்­டத்தில் பரிந்­து­ரைத்தார். ஆனால், தனியார் துறை­யினர் அனை­வரும் இச்­சம்­பள உயர்வை வழங்­க­வில்லை. சிலர் ரூபா 1000 ஐ மட்­டுமே வழங்­கி­னார்கள்.

இவ்­வா­றா­னதோர் நிலையில்தான் தனியார் துறை­யி­ன­ருக்கு ரூபா 2500 சம்­பள உயர்வு வழங்­கப்­பட வேண்டும் என்ற சட்­ட­மூல நகல் தயா­ரிக்­கப்­பட்டு அது சட்ட மா அதிபர் திணைக்­க­ளத்­திற்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது.

அது கிடைத்­த­வுடன் சட்ட மூலம் பாரா­ளு­மன்­றத்தில் முன்­வைக்­கப்­பட்டு நிறை­வேற்­றப்­பட்டு ரூபா 2500 சம்­பள உயர்வு வழங்கல் சட்­ட­மாக்­கப்­படும். இதே­போன்று தனியார் துறை­யி­னரின் அடிப்­படை சம்­பளம் மிகவும் குறை­வா­கவே உள்­ளது. ஆனால், சுப்பர் மார்க்கட் உட்­பட பல தனியார் நிறு­வ­னங்­களின் ஊழி­யர்கள் 10 மணித்­தி­யா­லத்­திற்கு மேல­தி­க­மாக வேலை செய்­கின்­றனர்.

எனவே, எதிர்­கா­லத்தில் தனியார் துறை­யி­னரின் அடிப்­படை சம்­பளம் ரூபா 10,000 ஆக இருக்க வேண்டும் என்­ப­தையும் சட்­ட­மாக்க திட்­ட­மிட்­டுள்ளோம். இன்று படித்த இளை­ஞர்கள் அரச துறை­யி­லேயே தொழில்­களை கேட்­கின்­றனர்.

தங்­க­ளது படிப்­புக்கு ஏற்ப இல்­லா­விட்­டாலும் கீழ் நிலை தொழி­லை­யா­வது வழங்­கு­மாறு கேட்­கின்­றனர். ஏனென்றால் அவர்கள் ஓய்வு பெற்ற பின்னர் மர­ணிக்கும் வரை ஓய்­வூ­தியம் கிடைக்கும். இறந்த பின்­னரும் தம்மை சார்ந்­த­வர்­க­ளுக்கு ஓய்­வூ­தியம் கிடைக்கும் என்­ப­த­னா­லேயே ஆகும்.

எனவே, அவர்கள் அரச துறையில் தொழில் புரிய விரும்­பு­கின்­றனர். இதனை கருத்தில் கொண்டே அர­சாங்கம் ஊழியர் சேம­லாப நிதி, ஊழியர் நம்­பிக்கை நிதியம் இரண்டையும் இணைத்து ஓய்வூதியத் திட்டமொன்றை அறிமுகப்படுத்தவுள்ளது.

இது தொடர்பில் எதிர்காலத்தில் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும் என்றும் அமைச்சர் ஜோன் செனவிரட்ண தெரிவித்தார்.

By

Related Post