Breaking
Fri. Nov 15th, 2024

முன்னாள் பாலஸ்தீன அதிபர் யாசர் அராபத் கடந்த 2004-ம் ஆண்டு மரணம் அடைந்தார். அவரை தொடர்ந்து அவரது பத்தா கட்சியை சேர்ந்த மகமது அப்பாஸ் ஆட்சி பொறுப்புக்கு வந்தார். ஆனால், அவரது படைகளுடன் ஹமாஸ் இயக்கத்தினர் கடுமையாக சண்டையிட்டு, காசா பகுதியை கடந்த 2007-ம் ஆண்டு கைப்பற்றினர்.

அதைத் தொடர்ந்து, யாசர் அரபாத், ரமல்லா நகரில் வாழ்ந்து வந்த இல்லம் மூடப்பட்டு கிடக்கிறது. அந்த இல்லத்தில் யாசர் அராபத் நினைவு அருங்காட்சியகம் அமைக்கப்படுகிறது.

இதற்காக, அந்த இல்லத்தை ஹமாஸ் ஆட்சியாளர்கள், யாசர் அராபத் கட்சியினரிடம் முறைப்படி ஒப்படைத்தனர். இதையொட்டி நடந்த நிகழ்ச்சியில் பாலஸ்தீனின் அனைத்து பிரிவு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

By

Related Post