Breaking
Wed. Dec 4th, 2024
புனித அல்குர்ஆனை களங்கப்படுத்திய குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருப்பவர் பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர்.

இவர்மீது இது தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கும் பதியப்பட்டு, விசாரணைகள் நடைபெற்று வருவதும் பலரும் அறிந்ததே.

இந்நிலையில், அல்குர்ஆன் விளக்கமும் அது பற்றிய அறிவும் போதாத நிலையில், அல்குர்ஆனை அவமதித்த வழக்கு விசாரணைகளுக்கு முகம் கொடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் ஞானசார தேரர், தற்போது அல்குர்ஆன் விளக்க வகுப்புக்களில்  ரகசியமாக குர் ஆணை பற்றி தெரிந்து வருவது  குறித்து தகவல்கள் கசிந்துள்ளன.

தனக்கு நெருங்கமான பெளத்த தேரர்கள், சட்டத்தரணிகள் மற்றும் சிவில் சேவை அமைப்புக்களின் முக்கியஸ்தர்கள் இவ்வகுப்புக்களுக்கு அழைத்து வரப்படுவதாகவும் அறியக் கிடைக்கிறது.

அல்குர்ஆன் அறிவு நிரம்பிய முக்கிய அறிஞர்களைக் கொண்டே இவ்வகுப்புக்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

தகவல்: http://www.colombotoday.com/bbs-kuran/

By

Related Post