முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தென்னாபிரிக்காவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
“ஐக்கிய நாடுகள் அமைதியை கட்டியெழுப்பும் நிதியின் பொறுப்புக்கூறல்” என்ற தொனிப்பொருளில் தென்னாபிரிக்காவில் நடைபெறவுள்ள கருத்தரங்கு ஒன்றில் சந்திரிகா பண்டாரநாயக்க உரையாற்றவுள்ளார்.
சந்திரிகா குமாரதுங்க இலங்கையின் சமாதானம் நல்லிணக்கம் மற்றும் நம்பிக்கையெழுப்புதலில் பெற்றுள்ள அனுபவங்கள் என்ற தலைப்பில் உரையாற்றவுள்ளார்.
இதேவேளை இலங்கையில் முன்னெடுக்கப்படவுள்ள உண்மையை கண்டறியும் ஆணைக்குழு தொடர்பில் சந்திரிகா குமாரதுங்க தென்னாபிரிக்க அரசாங்கத்தின் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
குறிப்பாக இலங்கையில் எவ்வாறு இந்த உண்மையை கண்டறியும் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை நிறுவி அதன் வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது என்பது குறித்து விரிவாக கலந்துரையாடப்படவுள்ளதாக தெரியவருகின்றது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நல்லிணக்கம் தொடர்பான ஆணைக்குழு ஒன்றிலும் தலைமை அதிகாரியாக செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.