இலங்கையும் பூட்டானும் தமக்கிடையே உறவுகளை பலப்படுத்திக்கொள்ள இணங்கியுள்ளன.
இரண்டு நாடுகளின் அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற வெளிநாட்டு அலுவலக கலந்துரையாடல் நேற்று கொழும்பில் நிறைவுபெற்றது
இதன்போது பூட்டானின் குழுவுக்கு அந்த நாட்டின் வெளியுறவு செயலாளர் சேரிங் டொர்ஜி தலைமை தாங்கினார்.
இலங்கை குழுவுக்கு வெளியுறவு அமைச்சின் செயலாளர் சித்திராங்கனி வாகிஸ்வரா தலைமை தாங்கினார்.
கலந்துரையாடல்களின்போது கல்வி, சுகாதாரம், சுற்றுலா, பொருளாதார ஒத்துழைப்பு உட்பட்ட பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டன.
இதேவேளை இலங்கையில் தற்போது மருத்துவப்பட்டப்படிப்பு உட்பட்ட பல துறைகளிலும் சுமார் 200 பூட்டானியர்கள் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது