Breaking
Fri. Nov 22nd, 2024

ஐ.நா.தீர்மானத்துக்கு அமைய பொறுப்பு கூறல் மற்றும் உண்­மையை கண்­ட­றியும் பொறி­முறையை நடை­மு­றைப்­ப­டுத்­து­வது குறித்து கருத்­துக்­களை கேட்­ட­றிந்து கொள்­வ­தற்­கான புத்­தி­ஜீ­விகள் குழுக்­களை அமைப்­ப­தற்கு சர்­வ­கட்சி தலை­வர்கள் கூட்டத்தில் தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ளது.

ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையின் 30 ஆவது கூட்­டத்­தொ­டரில் மேற்­கொள்­ளப்­பட்ட இலங்கை தொடர்­பி­லான தீர்­மானம் நாட்டின் இறை­யாண்­மைக்கு உட்­பட்டே நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­மென ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன சுட்­டிக்­காட்­டினார். நாட்டின் கௌரவம் பாது­காக்­கப்­படும் வகையில் ஐ.நா. பரிந்­து­ரைகள் தொடர்­பி­லான தீர்­மா­னங்கள் எடுக்­கப்­ப­டு­மெ­னவும் ஜனா­தி­பதி குறிப்­பிட்டார்.

ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையின் 30 ஆவது கூட்­டத்­தொ­ட­ரிலும் இலங்கை தொடர்­பாக மேற்­கொள்­ளப்­பட்ட தீர்­மா­னத்தின் அடிப்­ப­டையில் முன்­வைக்­கப்­பட்­டுள்ள பரிந்­து­ரைகள் தொடர்பில் உள்­நாட்டில் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்ள நட­வ­டிக்­கைகள் குறித்து சர்­வக்­கட்­சி­களின் கருத்­துக்­களை பெற்­றுக்­கொள்ளும் வகை­யி­லான செயற்த்­திட்­ட­மொன்று ஜனா­தி­ப­தியால் ஏற்­ப­டுத்­தப்­பட்­டது. அதற்­கி­ணங்க நேற்­றைய தினம் சர்­வ­கட்சி தலை­வர்­களின் கருத்­துக்­களை பெற்­றுக்­கொள்ளும் இரண்­டா­வது கூட்டம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் நேற்­றைய தினம் ஜனா­தி­பதி செய­ல­கத்தில் நடை­பெற்­றது.

இந்த கூட்­டத்தில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் பங்­காளி கட்­சி­யான ரெலோ அமைப்பின் சார்பில் எந்­த­வொரு பிர­தி­நி­தி­களும் பங்­கு­பற்­றி­யி­ருக்­க­வில்லை.

இந்­நி­லையில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்­சிகள் உட்­பட தமிழ், முஸ்லிம் சார்ந்த அர­சியல் கட்­சி­களின் பிர­தி­நி­திகள் பங்­கு­பற்­றி­யி­ருந்­தனர்.

அனைத்து கட்­சி­க­ளி­னாலும் ஏற்­றுக்­கொள்ள கூடிய விட­ய­தா­னங்­களை உட­ன­டி­யாக அமைச்­ச­ர­வையில் சமர்ப்­பித்து நிறை­வேற்றி கொள்­ள­வேண்டும். அதே­போன்று, தீர்­மா­னங்கள் எடுப்­ப­தற்கு முடி­யா­துள்ள பிரச்­சி­னை­களை இனி­வரும் கூட்­டத்­தொ­டரின் போது அலசி ஆராய வேண்­டு­மென சுட்­டிக்­காட்­டினார்.

அதனை தொடர்ந்து பொது­ஜன மக்கள் முன்­ன­ணி­யின தலை­வரும் முன்னாள் அமைச்­ச­ரு­மான தினேஷ் குண­வர்­தன, ஐக்­கிய நாடு­களின் மனித உரி­மைகள் பேரவை அறிக்­கையை நடை­மு­றைப்­ப­டுத்தும் தீர்­மானம் எடுக்­கப்­பட்ட பின்னர் இது குறித்து பேச்­சு­வார்த்தை நடத்­தாமல் இருக்­க­வேண்டும். அத்­துடன் கலப்பு நீதி­மன்றம் என்­பது இலங்­கையின் அர­சி­ய­ல­மைப்­புக்கு முர­ணா­னது அதே­போன்று ஜெனீவா அறிக்­கையில் ஏற்­றுக்­கொள்ள முடி­யாத பல்­வேறு பரிந்­து­ரைகள் காணப்­ப­டு­கின்­றன என்றார்.

ஜன­நா­யக கட்­சியின் தலை­வரும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சேகா முன்­னைய அரசின் நிகழ்ச்சி நிர­லுக்கு உட்­பட்­ட­தாக இந்த மாநாட்டின் யோச­னைகள் அமைய கூடாது. பக்­க­சார்ப்­பற்ற முறையில் முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும் என வலி­யு­றுத்­தினார்.ஜன­நா­யக மக்கள் முன்­ன­ணியின் தலை­வரும்

அமைச்­ச­ரு­மான மனோ கணேசன் குறிப்­பி­டு­கையில்,

ஜெனீவா அறிக்கை குறித்து அவ­தானம் செலுத்தும் ஆர்வம் இன­ரீ­தி­யான பிரச்­சி­னை­களை தீர்ப்­பதில் இருக்க வேண்டும். தனி நாட்டை உரு­வாக்­கு­வ­தற்கு எவ­ருக்கும் தேவை­யில்லை. இலங்கை என்­பது பல்­லி­னத்­த­வர்கள் வாழும் நாடு என்­ப­தனை புரிந்து கொண்டு செயற்­ப­ட­வேண்டும் என்றார்.

இதனை தொடர்ந்து மலை­யக மற்றும் முஸ்லிம் அர­சியல் கட்­சி­களின் பிர­தி­நி­திகள் மலை­யக மக்கள் எதிர்­நோக்கும் பிரச்­சி­னைகள் , 1990 ஆம் ஆண்டு வடக்­கி­லி­ருந்து முஸ்லிம் மக்கள் வௌியேற்­றப்­பட்­டமை , முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­பட்ட வன்­மு­றைகள் தொடர்­பாக கவனம் செலுத்­தப்­ப­ட­வேண்­டு­மெ­னவும் வலி­யு­றுத்­தினர்.

இதன்­போது குறுக்­கிட்ட தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் யாழ் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் தமி­ழ­ரசு கட்­சியின் வௌிவி­வ­கா­ரங்­க­ளுக்­கான செய­லா­ள­ரு­மான எம்.ஏ சுமந்­திரன், ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 30 ஆவது கூட்­டத்­தொ­டரில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்தின் அடிப்­ப­டையில் முன்­மொ­ழி­யப்­பட்ட பரிந்­து­ரைகள் அனைத்தும் முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட வேண்­டு­மென வலி­யு­றுத்­தினார்.

அத்­த­ரு­ணத்தில் கருத்து வௌியிட்ட ஈ.பி.ஆர்.எல்.எப் கட்­சியின் தலைவர் சுரேஷ் பிரே­ம­சந்­திரன் , இலங்­கையில் இடம்­பெற்ற நிகழ்வு தொடர்பில் நிறை­வேற்­றப்­பட்ட ஜெனீவா தீர்­மானம் மேலும் வலுப்­பெற்­றி­ருக்க வேண்டும் என்­பது எனது நிலைப்­பா­டாகும். இருப்­பினும் தற்­போது நிறை­வேற்­றப்­பட்­டுள்ள தீர்­மா­னத்தின் குறிப்­பி­டப்­பட்­டுள்ள பரிந்­து­ரைகள் முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும் என்­பதில் மாற்­றுக்­க­ருத்து இல்­லை­யென வலி­யு­றுத்­தினார்.

அதனை தொடர்ந்து வௌிவி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர

ஜெனீ­வாவில் முன்­வைக்­கப்­பட்ட அனைத்து பரிந்­து­ரை­க­ளையும் அலசி ஆராய்ந்து பார்த்த பின்­னரே இது குறித்­தான தீர்க்­க­மான முடி­வுக்கு வர­வேண்டும். ஜெனீவா தீர்­மா­னத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள முக்­கிய 20 விட­யங்கள் தொடர்பில் தீர்க்­க­மான முடி­வொன்றை எட்­டு­வ­தற்கு அனைத்து தரப்­பி­னரும் யதார்த்த ரீதி­யான கருத்­துக்­க­ளையும் முன்­வைக்க வேண்டும் என்றார்.

மக்கள் விடு­தலை முன்­னணி சார்­பாக கலந்து கொண்ட விஜித ஹேரத் எம்.பி, உள்­ளக பொறி­மு­றையின் ஊடாக பல்­வேறு பிரச்­சி­னை­களை தீர்க்க முடியும் வௌிநாட்டு பிர­தி­நி­திகள் தொடர்பில் மக்­களை உரி­ய­வாறு தௌிவுப்­ப­டுத்த வேண்டும் எனக் குறிப்­பிட்டார்.

அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் சார்­பாக கலந்து கொண்ட பிரதி அமைச்சர் அமீர் அலி,மனித உரிமை மீறல்கள் தொடர்­பி­லான விசா­ரணை கால எல்லை 1985 ஆம் ஆண்டு வரையில் நீடிக்­கப்­ப­ட­வேண்டும் என குறிப்­பிட்டார்.

புளொட் அமைப்பின் தலை­வரும் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் யாழ் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான தர்­ம­லிங்கம் சித்­தார்த்தன் குறிப்­பி­டு­கையில்,

தமிழ் மக்­களின் இதய உணர்­வினை நன்கு புரிந்து கொண்டு செயற்ப்­பட வேண்டும். மேலும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான அர­சாங்கம் மீது தமிழ் மக்கள் முழுமையான நம்பிக்கை வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதேநேரம் கடந்த கூட்டத்தில் ஐ.நா தீர்மானங்கள் தொடர்பிலான அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றினதும் எழுத்து மூலமான ஆலோசனைகளை சமர்ப்பிக்குமாறு கடந்த கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்திருந்தார். அதற்கமைய சமர்ப்பிக்கப்பட்ட எழுத்துமூல ஆலோசனைகளை அரசியல் கட்சிகளுக்கிடையில் பகிர்ந்து கொள்வதற்குரிய நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படுமெனவும் மீண்டும் குறித்த விடயம் தொடர்பிலான கூட்டம் கூட்டப்படுவது தொடர்பில் அறிவித்தல் விடுக்கப்படுமெனவும் ஜனாதிபதி அறிவித்த நிலையில்,நேற்றைய சர்வக்கட்சிகளின் கூட்டம் நிறைவடைந்தது.

By

Related Post