ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின, அண்மையில் அவன்ட்கார்ட் நிறுவனத்தின் பணிகள் கடற்படையினரிடம் ஒப்படைத்திருந்தார்.
தேசியப் பாதுகாப்பிற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வெளிநாட்டு கப்பல்களுக்கு ஆயுதங்களை வழங்குதல் மற்றும் களஞ்சியப்படுத்தல் ஆகிய நடவடிக்கைகளின் மூலம் கடற்படையினர் எட்டு கோடி ரூபா வருமானம் ஈட்டியுள்ளனர்.
கடந்த நான்கு நாட்களில் இவ்வாறு வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக கடற்படைத் தளபதி வைஸ்ட் அட்மிரல் ரவிந்திர விஜேகுணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.
ஆயுதங்களை களஞ்சியப்படுத்தவும் அவற்றை விநியோகம் செய்யவும் தெற்கு கடற்படை தலைமையகத்தில் போதியளவு இடவசதிகள் உண்டு.
கடற்படையினரின் தற்போதைய பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில், கடற்பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என சிங்கள நாளேடு ஒன்றுக்கு கடற்படைத் தளபதி தெரிவித்துள்ளார்.
களஞ்சியப்படுத்தப்பட்ட ஆயுதங்களின் இலக்கங்கள் அழிக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் தொடர்ச்சியாக விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.