புது வருடத்தை முன்னிட்டு அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகளை வர்ததக, கைத்தொழில் அமைச்சர் றிஷாத் பதியுதீன் குறைத்துள்ளார். .
இதன்படி. மைசூர் பருப்பு ஒரு கிலோ 190 ரூபாவாகவும், கிழங்கு ஒரு கிலோ 145 ரூபாவாகவும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 155 ரூபாவாகவும் விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சீனி ஒரு கிலோ 95 ரூபாகவும், கோதுமை மாவு ஒரு கிலோ 87 ரூபாகவும், டின் மீன் 140 ரூபாகவும் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தோல் அகற்றப்பட்ட கோழியிறைச்சி ஒரு கிலோ 480 ரூபாவாகவும், பொதி செய்யப்பட்ட கோதுமை மா ஒரு கிலோ 95 ரூபாவாகவும், செத்தல் மிளகாய் ஒரு கிலோ 355 ரூபாவாகவும், கட்டுப்பாட்டு விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
வருட இறுதி பண்டிகை காலத்தை முன்னிட்டு நுகர்வோர் விவகார அதிகாரசபை இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.
எதிர்வரும் 20 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவு திட்டத்திற்கு முன்னதாக நுகர்வோரின் நன்மை கருதி கட்டுப்பாட்டு விலைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் இந்த விலை எதிர்வரும் 20 திகதியில் இருந்து பின்பற்றப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.