இந்தியா, இந்த மிதக்கும் ஆயுதக் கப்பல் விடயம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய நாளிதழ் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள முன்னாள் இராணுவ அதிகாரி கேட்டுள்ளார்.
இந்த விசாரணைகளுக்கு இலங்கையின் அதிகாரிகளும் ஒத்துழைக்க வேண்டும் என்று இந்தியாவின் விசேட படை நடவடிக்கைகளுக்கான முன்னாள் இராணுவ அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் பிரகாஷ் கட்டொக் தெரிவித்துள்ளார்.
இந்திய எல்லைப் பகுதிக்குள் பல ஆயுதங்களை கொண்ட கப்பல் ஒன்று இயங்கி வந்தது என்பது பாதுகாப்புக்கு கேள்வியை ஏற்படுத்தும் விடயமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக்கப்பலில் 816 தன்னியக்க துப்பாக்கிகள் இருந்தன என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ராஜபக்சவின் ஆட்சியின்போது இடம்பெற்ற அவன்ட்கார்ட் என்ற இந்த சம்பவம்,
ஏற்கனவே 1995ஆம் மேற்கு வங்காளத்தில் கம்யூனிஸ ஆட்சியை கவிழ்ப்பதற்காக இந்திய மத்தியில் ஆட்சி புரிந்த காங்கிரஸ் அரசாங்கத்துக்கு உதவிபுரியும் நோக்கில்,
டென்மார்க்கை சேர்ந்த புலனாய்வுப் பிரிவின் டென்மார்க்கின் கிம் டெவி என்ற நைல்ஸ் லொக் என்பவர் என்டனொவ் என் 26 விமானத்தின் மூலம் புருலியா மாவட்டத்தில் சட்டவிரோதமாக ஆயுதங்களை வானில் இருந்து இறக்கிய சம்பவத்தை நினைவூட்டுவதாக பாதுகாப்பு ஆய்வாளர்கள் இந்திய நாளிதழ் ஒன்றியம் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.tw