நாடாளும்னற உறுப்பினர்கள் பிரதமரிடம் நேரடியாக கேள்வி எழுப்ப சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளது.
எதிர்வரும் காலங்களில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரதமரிடம் நேரடியாக கேள்விகளை எழுப்ப முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி பிரதி வியாழக்கிழமை தோறும் நாடாளுமன்ற அமர்வுகள் ஆம்பமாகி முதல் அரை மணித்தியாலயம் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு அறிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எழக்கூடிய எந்தவொரு கேள்வியையும் பிரதமரிடம் கேட்க முடியும்.
முன்னதாக இந்தக் கேள்விகளை பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
பின்னர் நாடாளுமன்றில் கேள்விகளை பிரதமரிடம் எழுப்ப முடியும் எனவும், அந்தக் கேள்விகளுக்கு பிரதமர் பதிலளிப்பார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.