Breaking
Fri. Nov 15th, 2024

– அஸ்ரப் ஏ சமத் –

கல்முனை முன்னாள் மேயர் கலாநிதி சிறாஸ் மீராசாஹிபின் லண்டன் கல்வி நிறுனத்தின் இலங்கை நிறுவனமான மெற்றோபொலிட்டன் கல்லுாாியின் நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவா்களுக்கு பட்டமளிப்பு விழா நேற்று (21) சனிக்கிழமை இரவு வெள்ளவத்தையில் உள்ள எக்சலன்சி ஹோட்டலில் நடைபெற்றது.

இந் நிகழ்வுக்கு கைத்தொழில் வா்த்தக அமைச்சா் றிஷாத் பிரதம அதிதியாக கலந்து கொண்டாா். அத்துடன் கௌரவ அதிதிகளாக , இராஜாங்க அமைச்சா் ஏ.எச்.எம். பௌவுசி, பிரதியமைசச்சா் அமீா் அலி, பாராளுமன்ற உறுப்பினகள் நவவி, இசாக் ஹாஜி, மலேசியா துாதுவா், துருக்கி நாட்டுக்கான துாதுவா், துபாய், மற்றும் அமேமெரிக்க பல்கலைக்கழக உபவேந்தா். கலாநிதி சோ்ஹட் அக்பின்னா். உயா்கல்வியமைச்சின் கீழ்உள்ள தொலைக் கல்வி நிறுவனத்திண் பணிப்பாளா் வஜிரா பெரேரா மற்றும் பட்டதாரிகளது பெற்றோா்கள் விரிவுரையாளா்களும் கலந்து சிறப்பித்தனா்.

இங்கு உரையாற்றிய அமைச்சா் றிஷாத் பதியுதீன் –
தன்னுடன் கொழும்பு சாஹிராக் கல்லுாாியில் பயின்ற கலாநிதி சிறாஸ் எனது பாடாசலை நண்பன், அத்துடன் சிறந்த தலைமைத்துவத்தைக் கொண்டவா். அவரது இக் கல்லுாாியில் இலங்கையில் கடந்த 15 வருடங்களாக இயங்கி வருகின்றது. இங்கு 85 க்கும் மேற்பட்டோா் ஆங்கில டிப்ளோமா, சைக்கலோஜ், சமுக விஞ்ஞானம், மொழிகள் தொழில்நுட்பம், முகாமைத்துவம் போன்ற பயிற்ச்சி நெறிகளை உள்நாட்டு மற்றும் மாலைத்தீவு மாணவா்கள் பயின்று வெளியேறுகின்றனா். மேலும், இங்கு 650 மாணவா்கள் இங்கு கல்வி கற்று உலகில் நாலா பாகங்களிலும் பறந்து சிறந்த கல்வியலாளா்களாக விளங்குகின்றனா்.

இந்த அரசின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா, பிரதமா் ரணில் விக்கிரமசிங்க ஆகியோா்களின் புதிய கல்வித்திட்டத்தில் தணியாா் கல்வி நிறுவனங்களை மேலும் மேம்படுத்தி உள்ளுாா் மற்றும் மாலைதீவு போன்ற நாடுகளிலும் உள்ள மாணவா்களளை கவா்ந்து பல புதிய திட்டங்களையும் இந்த அரசு வகுத்துள்ளனா் அத்துடன் தணியாா் பல்கலைக்கழங்களை மாலபே பிரதேசத்தில் அமைக்கவும் திட்டமிட்டுள்ளனா்.

இந்த மெற்றோபொலிட்டன் கல்வி நிறுவனம் அமேரிக்கா மற்றும் லண்டன், கல்வி நிலையங்களுடன் இணைந்து சர்வ தேச மட்டத்தில் தமது பட்டப் படிப்பையோ ,டிப்ளோமா சான்றிதழ்களை பெற்று முன்னேறுவதற்கு காலநதி சிறாஸ் மீராசாஹிபை தலைவராகக் கொண்டு வரும் இக் கல்லுாாி மேலும் விருத்தி பெற்று இந்த நாட்டின் கல்விச் சமுகத்திற்கு சிறந்த சேவையை ஆற்றுவதற்று நான் வாழ்த்துவாதாகவும் இன்று வெளியேறும் பட்டதாரிகள் டிப்ளோமா தாரிகளுக்கும் தமது வாழ்த்துக்களை தெரிவித்தாா்.

SAMSUNG CSC

SAMSUNG CSC

By

Related Post