ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதோடு வெளிநாட்டவர்களுக்கு தாராளமயமும் உள்நாட்டவர்களுக்கு நெருக்கடியையும் அரசின் வரவு செலவுத் திட்டம் தோற்றுவித்துள்ளதாக கொழும்பு மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறு ப்பினர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
அரசின் வரவு செலவுத்திட்டம் தொடர்பாக தினேஷ் குணவர்த்தன எம்.பி. மேலும் தெரிவித்திருப்பதாவது. 2016ஆம் ஆண்டு நாடு மிக மோசமான விளைவுகளை சந்திக்கும் விதத்திலான வரவு செலவுத் திட்டத்தினை அரசு முன்வைத்துள்ளது.
இதன் மூலம் ஐ.தே.கட்சியின் உண்மை யான மக்கள் விரோத செயற்பாடுகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. வாழ்க்கைச் செலவு குறையும் என்ற மக்களின் எதிர்பார்ப்பு 2016ஆல் நிறைவேறாது மாறாக வாழ்க்கைச் செலவு அதிகரிக்கும் ஆண்டாக அது அமையும்.
தொழில் புரிவோர் மற்றும் தொழில் செய்வதற்கு எதிர்பார்த்திருப்போர் பாரிய நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும்.அரச வளங்கள் அனைத்தும் தனியார் மயமாக்கப்படும். அது மட்டுமல்லாது ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
உழைக்கும் வர்க்கத்தினரிடமிருந்து இந்த உரிமைகள் பறிக்கப்படும் ஆபத்து தலை தூக்கியுள்ளது. அரசிற்கு உள்ள காணி மற்றும் பெருந்தோட்டத்துறை உரிமைகள் பறிக்கப்பட்டு அவை தனியாருக்கு வழங் கும் ஆபத்து தலைதூக்கியுள்ளது.
இலங்கையின் பொருளாதார நீரூற்று வெளிநாடுகளுக்குத் தாரை வார்க்கப்படப் போகின்றது. வெளிநாட்டவர்களுக்கு தாராளமயக் கொள்கையும் உள் நாட்ட வர்களுக்கு நெருக்கடிகளும் ஏற்படும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை முழுமையாக வெளி நாட்டவர்களுக்கு வழங்கி விட்டு உள்நா ட்டவர்களை ஓரம் கட்டியுள்ள வரவு செல வுத் திட்டம் இதுவாகும் என்று தினேஷ் குணவர்த்தன எம்.பி. தெரிவித்துள்ளார்.