Breaking
Wed. Dec 25th, 2024

காத்தான்குடி அல் மனார் நிறுவனம் இம்முறை ஹஜ் செல்லவிருப்பவர்களின் நலன் கருதி ‘மக்கா அபிவிருத்தியில் ஹஜ் செயற்பாடு’ எனும் தொனிப்பொருளுடனான விளக்கச் செயற்பாடு ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளது.

எதிர்வரும் 06.09.2014 சனிக்கிழமை மாலை 04:00 மணிக்கு அல் மனார், அர்ராஷித் கேட்போர் கூடத்தில் நடாத்தப்படவுள்ளது.

ஹஜ் நடைமுறைகளிலும் மற்றும் சவூதி சட்டதிட்டங்களில் நன்கு புலமை பெற்றவருமான ஏ.எல்.எம். மும்தாஸ் மதனி மற்றும் எம்.எம்.எம். மன்ஸூர் மதனி ஆகியோர்கள் வளவாளர்களாக கலந்து கொள்ளவுள்ளமை சிறப்பம்சமாகும்.

சகல ஹஜ் முகவர்கள் ஊடாகவும் காத்தான்குடியிலிருந்து புறப்பட்டு செல்லவுள்ள அனைத்து சகோதரர, சகோதரிகளையும்; இதில் பங்கெடுத்து நன்மையடையுமாறு வேண்டப்படுகின்றீர்கள்.

இதுபற்றிய ஏதும் தகவல்களை அறிய விரும்பின் பிரதிப்பணிப்பாளராக கடமை புரியும் எம்.ஐ.எம். அன்வருடன் 0779232130 எனும் இலக்கத்துக்கு தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம்.

Related Post