Breaking
Mon. Dec 23rd, 2024

தேசிய அர­சாங்­கத்தின் வரவு – செலவுத் திட்ட பிரே­ர­ணைக்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்து அர­சாங்­கத்­துடன் இணைந்துகொள்­வ­தற்கு ஐக்கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் நான்கு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தீர்­மா­னித்­துள்­ள­னர்.

இந்த நான்கு பாரா­­­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் தவி­சா­ளரும் அமைச்­ச­ரு­மான மலிக்­ ச­ம­ரவிக்கி­ர­ம­வுடன் இது­தொ­டர்­பாக இரண்டு சுற்று பேச்­சு­வார்த்தைகளை நடத்­தி­யுள்­ள­னர்.

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணி­யின் இந்த நான்கு பாரா­­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளது தீர்­மா­னம் குறித்து அமைச்சர் மலிக் சம­ர­விக்கி­ரம பிர­­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்­க­விடம் அறி­வித்­துள்­ளார்.ஜ­னா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் அனு­ம­தியின் கீழ் நல்­லாட்சி அர­சாங்­கத்தில் இந்த பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் இணைந்துகொள்­­வதில் எந்த எதிர்ப்பும் இல்­லை­யென பிரதமர் தெரி­வித் ­துள்­ளார்.

இந்­நி­லையில் வரவு செலவு திட்ட பிரே­ர­ ணை­யில் அர­சாங்கத்­துக்கு ஆதர­வாக வாக்­க­ளித்­து­விட்டு அர­சாங்­கத்­துடன் இணைந்து கொள்­ள­­வி­ருக்கும் இந்த நான்கு பேரில் ஒரு­வ­ருக்கு அமைச்­ச­ரவை அந்­தஸ்­துள்ள அமைச்­சுப்­ப­தவி வழங்­கப்­ப­ட­வுள்­ள­து.

இந்த அமைச்­சுப்­ப­தவி வழங்­கப்­ப­டு­வது ஐக்­கிய தேசியக் கட்சிக்கும் ஐக்­கிய மக்­கள் சுதந்­திர முன்­ன­ணிக்கும் இடையில் தேசிய அரசாங்கம் அமைப்­பதில் கைச்­சாத்­தி­டப்­பட்ட ஒப்­பந்­தத்தின் அடிப்­ப­டையில் ஸ்ரீ­லங்கா சுதந்­திரக் கட்­சிக்கு வழங்கப்­பட்ட அமைச்­சுப்­ப­தவி கோட்­டாவின் கீழா­கும்.

அத்­துடன் அர­சாங்­கத்தில் இணைந்து கொள்­ள­வுள்ள ஏனைய மூன்று பேரில் ஒரு­வ­ருக்கு பிரதி அமைச்­சுப்­ப­த­வியும் மற்­றை­ய­வ­­­ருக்கு மாவ­ட்ட இணைப்­புக்­கு­ழுவின் இணைத்­த­லைவர் பத­வியும் வழங்­க­­வுள்­ள­ தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­ற­து.

இந்த நான்கு பேரும் அர­சாங்­கத்­துடன் இணைந்துகொள்­வ­தற்கு முன்பு ஜனா­தி­பதி மைத்­திரிபால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்க ஆகி­யோரை சந்­தி க்­ ஒக­வுள்­ள­னர். அர­சாங்­கத்தில் இணை­ய­வு ள்ள இந்த நான்கு பேரில் ஒருவர் ‘மஹி­ந்­த­ வுடன் எழுந்­தி­டுவோம் ‘அமைப்பின் பிர­பல உறுப்­பி­னராக செயற்­பட்­டவர் என்பது குறிப்­பி­டத்­தக்­க­து.

By

Related Post