Breaking
Mon. Dec 23rd, 2024
பாதையின் வெள்ளை நிற கோடுகளால் குறிப்பிடப்பட்டிருக்கும் வரிசையை மீறி, பாதுகாப்பற்ற முறையில் வாகனம் செலுத்துவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.நாளை (26) மு.ப 6.00 முதல் இந்நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, ஶ்ரீ ஜயவர்தனபுர வீதியின், ஜயந்திபுரவிலிருந்து கொழும்பு வரையான வீதியில் அதிகளவான பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டு இச்சட்டத்தை அமுல்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது தவிர, கொழும்பை நோக்கிய ஏனைய வீதிகளிலும் இது அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது குறித்த விதிகளை மீறுவோருக்கு எதிராக, வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறான நடவடிக்கையின் மூலம், வாகன நெரிசலை குறைக்கவும், வாகன விபத்துகளை தவிர்க்கவும் எதிர்பார்ப்பதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By

Related Post