Breaking
Mon. Dec 23rd, 2024
சுவிட்சர்லாந்தில் நேற்றைய தினம் (25) ரயில் நிலையம் அருகே கண்டுபிடிக்கப்பட்ட வெடிபொருள்  பாதுகாப்பாக  செயலிழக்கம் செய்யப்பட்டது.சுவிஸின் பெர்ன் நகரில் உள்ள ரயில் நிலையம் அருகில் மர்ம பொருள் இருப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து பெர்ன் சிறப்பு பொலிஸ் படையினர் மற்றும் வெடிப்பொருட்களை கண்டுபிடிக்கும் ரோபோ ,மூலம் தீவிர சோதனை நடத்தப்பட்டது.

இந்நிலையில் வெடிப்பொருள்கள் நிரம்பிய பொருளை கைப்பற்றிய அவர்கள் அதை செயலிழக்க முடிவு செய்தனர்.

இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள சாலைகள் அனைத்தும் மூடப்பட்டன. இதையடுத்து அந்த மர்ம பொருள் வெடிக்க செய்யப்பட்டது.

அப்போது பெரிய அளவிலான சத்தமும் கண்ணை பறிக்கும் வகையில் வெளிச்சமும் ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக அப்பகுதியில் பாரிய அளவில் பொலிசார் மீட்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர்.என்பது குறிப்பிடத்தக்கது.

swiss_bomb_004

swiss_bomb_002

By

Related Post