வரவு செலவுத்திட்டத்தில் குறைபாடுகள் இருந்தால் சுட்டிக்காட்டுமாறு நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வரவு செலவுத்திட்டத்தின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் ரவி கருணாநாயக்க,
2016ம் ஆண்டு தொடக்கம் அனைத்து அரச நிறுவனங்களினதும் செலவுகள் குறித்து முழுமையான கவனம் செலுத்தப்படும்.
அத்துடன் தேவையான இடங்களில் அரசாங்கம் முதலீடுகளை மேற்கொண்டு அதற்கான செலவுகளை வரவு வைப்பதற்கு கணக்குகளில் திருத்தம் மேற்கொள்ளப்படும்.
இந்த வரவு செலவுத்திட்டத்தில் குறைபாடுகள் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள். அதனை திறந்த மனதுடன் ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறேன் என்றும் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.