சவூதி அரேபியாவில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகளில் அந்நாட்டு பெண்கள் முதன் முறையாக ஈடுப்பட்டுள்ளதுடன் வாக்களிக்கவுமுள்ளனர்.
எதிர்வரும் மாதம் நடைபெறவுள்ள இந்த தேர்தலில், சுமார் 900 பெண்கள் போட்டியிடுகின்றனர்.
பொது இடங்களில் இருபாலாரும் ஒன்றாக இணைந்து இருப்பதை சவூதி சட்டங்கள் கடுமையாக எதிர்க்கும் நிலையில், ஆண் மற்றும் பெண் வேட்பாளர்கள் அங்கு ஒரே நேரத்தில் தேர்தல் மேடையை பகிர்ந்துக்கொள்ள முடியாது.
பெண்கள் பொது இடங்களில் தமது முகத்தை காட்ட முடியாது என்பதும், ஆண் வேட்பாளர்கள் தமது படங்களை தேர்தல் பிரச்சார விளம்பரங்களில் போட முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.