நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவளிக்கப்படாது என ஜே.வி.பி கட்சி அறிவித்துள்ளது.
கூட்டு எதிர்ககட்சியினால் சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவளிக்கப்படாது கட்சியின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
நம்பிக்கையில்லா தீர்மானம் நிதி அமைச்சருக்கு எதிராக சமர்ப்பிக்கப்படுவதில் அர்த்தமில்லை.
அசராங்கத்தின் தற்போதைய பொருளாதார கொள்கைகளுக்கு எதிராகவே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட வேண்டும்.
நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து ஜே.வி.பி ஆராய்ந்து வருகின்றது.
அரசாங்கத்தின் பொருளாதார கொள்கைகளுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படுவது மிகவும் அவசியமானது என விஜித ஹேரத் சிங்களப் பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.