Breaking
Fri. Nov 22nd, 2024
திரைப்படங்கள், நாடகங்கள் மற்றும் விளம்பர ஒளிப்பதிவுகளின் போது பொலிஸ் சீருடை பயன்படுத்தப்படும் பட்சத்தில், அதற்கான அனுமதியை பொலிஸ் திணைக்களத்திடம் கோர வேண்டும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர இதனைக் குறிப்பிட்டார்.

பொலிஸாரின் நற்பெயருக்கு கலங்கத்தை ஏற்படுத்தும் வகையில் விளம்பரமொன்று ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த நிறுவனத்திற்கு எதிராக முறைப்பாடொன்று பதிவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதனால் இனிவரும் காலங்களில் பொலிஸ் சீருடை பயன்படுத்தப்படும் பட்சத்தில், அதற்கான அனுமதியை பொலிஸ் திணைக்களத்திடமிருந்து பெற்றுக் கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இதேவேளை, வீதி ஒழுங்கு விதிகளை மீறிய 13,095 சாரதிகளுக்கு எதிராக கடந்த நவம்பர் மாதத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

By

Related Post