வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களித்த அனைவருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.
2016ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான முதலாவது வாக்கெடுப்பு நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.
இதன்போது வரவுசெலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த அனைத்து ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி நன்றி தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
2016 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் 2 ஆவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் நேற்று 107 மேலதிக வாக்குகளால் நிறைவுபெற்றுள்ளதுடன் இந்த வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 159 வாக்குகளும் எதிராக 52 வாக்குகளும் அளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.