Breaking
Fri. Nov 15th, 2024
அவன்ட் கார்ட் மற்றும் ரக்ன லங்கா நிறுவனத்தில் இடம்பெற்ற மோசடிகள் குறித்த விசாரணைக்காக, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்க்ஷ இன்று (வியாழக்கிழமை) பாரிய மோசடிகள் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் பயங்கரவாதத் தடைச்சட்டம் மற்றும் ஆயுத கொடுக்கல் வாங்கல் சட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் கோத்தபாய உள்ளிட்ட ஐவரை குற்றவாளிகளாக நிரூபிக்க முடியுமென அண்மையில் பிரதி சட்டமா அதிபர் தெரிவித்திருந்தார். இதனையடுத்து குறித்த மோசடிகள் தொடர்பில் பொதுமக்களிடமும் சாட்சியங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில், கோத்தபாய உள்ளிட்டோர் இன்றும் நாளையும் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கடந்த ஆட்சிக்காலத்தில் இரு யானைக்குட்டிகளை சட்டவிரோதமாக வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டிலும் கோத்தபாயவிடம் விசாரணை நடத்தப்பட வேண்டுமென, சட்டமா அதிபர் நேற்று முன்தினம் நீதிமன்றில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post