ஊவா மாகாண சபையின் விவசாய, நீர்ப்பாசன, காணி, கால்நடை உற்பத்தி, நன்னீர் மீன் வளர்ப்பு அமைச்சராக உபாலி டெல்டன் சமரவீர பதவியேற்றுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் நேற்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
நேற்று பாராளுமன்றத்தில் உள்ள ஜனாதிபதியின் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பதுளை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் மாகாண சபை உறுப்பினரான சமரவீர ஊவா மாகாண சபை அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
இவர் 15 வருடங்கள் ஊவா மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவராக செயற்பட்டுள்ளார்.