Breaking
Mon. Dec 23rd, 2024

2050-ம் ஆண்டிற்குள் உலக அளவில் அதிக முஸ்லீம்கள் கொண்ட நாடாக இந்தியா மாறும் என்று ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த பியு ஆராய்ச்சி மையம் இந்த கருத்தினை தெரிவித்துள்ளது. அதேபோல், 2050-ம் ஆண்டிற்குள் ஐரோப்பிய மக்கள் தொகையில் முஸ்லீம்கள் 10 சதவீதம் இருப்பார்கள் என்று அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

தற்போதையை நிலவரப்படி உலக அளவில் அதிக முஸ்லீம்கள் வாழும் நாடாக இந்தோனேசியா உள்ளது. அதற்கு அடுத்தபடியாக முஸ்லீம்கள் அதிகம் வாழும் இரண்டாவது நாடாக இந்தியா உள்ளது. தற்போது 62 சதவீதம் முஸ்லீம்கள் ஆசிய-பசுபிக் பகுதிகளில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஈரான், துருக்கி உள்ளிட்ட நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர்.

இதில் பாகிஸ்தானைவிட இந்தியாவில் தான் அதிக முஸ்லீம்கள் வாழ்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

By

Related Post