Breaking
Fri. Nov 22nd, 2024
கடந்த அரசாங்கம் நச்சுப் பொருட்கள் கலந்த இரசாயன உரத்தையே மானியமாக வழங்கியது என அதுரலிய ரதன தேரர் நேற்று நாடாளுமன்றில் குற்றம் சுமத்தியுள்ளார்.

எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உர மானியம் குறைக்கப்பட்டதாக குற்றம் சுமத்துகின்றனர்.

எனினும் கடந்த அரசாங்கம் இரசாயனக் கலவைகள் அடங்கிய உரத்தையே வழங்கியது.

இவ்வாறு வழங்கிய உரத்தின் பாரியளவு வருமானம் வெளிநாடுகளுக்கே சென்றது.

இந்த வகை உரங்களில் அதிகளவில் கெட்மியம் மற்றும் ஆசனிக் போன்ற நச்சு இரசாயன பதார்த்தங்கள் காணப்பட்டன.

இவை மண்ணின் வளத்தை அழிக்கும் வகையில் தொழிற்படக்கூடியவை.

தற்போது உலக நாடுகள் பலவற்றில் இயற்கைக்கு பாதுகாப்பான உரப் பயன்பாடே முன்னெடுக்கப்படுகின்றது.

இதன் காரணமாகவே நாம் இம்முறை விவசாயிகளுக்கு உர மானியத்திற்கு பதிலாக உரத்தைக் கொள்வனவு செய்ய பணம் வழங்க வேண்டுமென்றே யோசனையை முன்வைத்தோம்.

இதன் மூலம் இரசாயன உரப் பயன்பாட்டை வரையறுக்க முடியும் என அதுரலிய ரதன தேரர் தெரிவித்துள்ளார்.

By

Related Post