ISIS க்கு, இலங்கையின் சிறிலங்கா முஸ்லிம் கவுன்சில் கண்டனம் தெரிவித்துள்ளது.
முஸ்லிம் கவுன்சிலின் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமிய மதத்தின் பெயரை பயன்படுத்தி இவ்வாறு மனித உயிர்கள் காவுகொள்ளப்படுவதை ஏற்க முடியாது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் உடனடியாக இவ்வாறான குற்ற செயல்களை நிறுத்துமாறு ஐ.எஸ். வாதிகளின் தலைவரான அபூ பக்ரால் பக்டாடியை சிறிலங்கா முஸ்லிம் கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.