Breaking
Fri. Nov 15th, 2024
இலங்கையில் பௌத்தர்களுக்கு மிகவும் முக்கியமான தினங்களில் ஒன்றாக கருதப்படும் வெசாக் பௌர்ணமி தினம், சர்வதேச விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெசாக் பௌர்ணமி தினம் ஐக்கிய நாடுகள் அமைப்பில் விடுமுறை தினமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் மே மாதம் 21ம் திகதி ஐக்கிய நாடுகள் அமைப்பின் விடுமுறை தினமாக ஏற்றுக்கொள்ளபபட்டுள்ளது.

அண்மையில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் 193 உறுப்பு நாடுகளும் கூடிய போது, வெசாக் பௌர்ணமி தினத்தை விடுமுறையாக அறிவிக்க இணக்கம் காணப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக தீபாவளி பண்டிகை, பெரிய வெள்ளி, யூதர்களின் யோமி கிப்புர் தினம் உள்ளிட்ட ஏழு நாட்கள் சர்வதேச விடுமுறையாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

1999ம் ஆண்டு முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் வெசாக் மற்றும் பொசோன் பௌர்னமி தினங்களை சர்வதேச தினங்களாக பிரகடனம் செய்ய வேண்டுமெனவும், சர்வதேச விடுமுறை தினங்களாக அறிவிக்க வேண்டுமெனவும் கோரியிருந்தார்.

சர்வதேச தினமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட போதிலும் விடுமுறை வழங்குது குறித்த யோசனை நிராகரிக்கப்பட்டிருந்தது.

எனினும், யூதர்கள் யோமி கிப்புர் தினத்தை சர்வதேச விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டுமென தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்து வந்த நிலையில் இந்த தினமும் தீபாவளி, வெசாக் உள்ளிட்ட தினங்களும் சர்வதேச விடுமுறை தினங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது என கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. (tw)

By

Related Post