நாட்டின் தலைவர் பதவிக்கு யார் பொருத்தமானவர் என்பதை எதிர்வரும் 28 ஆம் திகதி அறிவிக்க போவதாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 28 ஆம் திகதி நடைபெறும் மஹா சங்க மாநாட்டில் இதனை வெளியிடப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
தற்போது நாட்டுக்கும் இனத்திற்கும் ஆதரவான தலைவர் ஒருவருக்கான கடும் தேவை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மஹா சங்க மாநாட்டில் அது பற்றிய அறிவிப்பை வெளியிட உள்ளோம்.
உண்மையான உணர்வுகளை கொண்ட பௌத்த பிக்குமாரை, மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளோம் என்றும் ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.