Breaking
Sat. Sep 21st, 2024

இஸ்லாத்தில் பன்றி இறைச்சியை உண்பதும் விலக்கப்பட பாவச்செயலாகும் (ஹராம்) .

இந்நிலையில், அமெரிக்காவில் சமீபகாலமாக மதவெறுப்புணர்வின் உச்சகட்டமாக இஸ்லாமியர்களால் விலக்கப்பட்ட பன்றி இறைச்சியை சிலர் மசூதிகளுக்குள் வீசிவிட்டு செல்வது அரங்கேறி வருகின்றது. இதில் ஒருகட்டமாக அமெரிக்காவின் வடகிழக்கு மாநிலமான புளோரிடாவின் டிட்டுஸ்வில்லி பகுதியில் உள்ள மஸ்ஜித் அல் முனின் என்ற மசூதியில் கடந்த வெள்ளிக்கிழமை இதே சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அந்த மசூதியின் பின்வாசல் வழியாக ஒற்றை ஆடையால் உடலை மறைத்தபடி, மொட்டைத் தலையுடன் நுழைந்த ஒரு மர்ம நபர் அங்கிருந்த விளக்குகள், கண்காணிப்பு கேமரா ஆகியவற்றை வீச்சரிவாளால் தாக்கி சேதப்படுத்தியதுடன், மசூதி வாசலில் பன்றி இறைச்சியையும் வைத்துவிட்டு சென்றுள்ளான்.

இந்த காட்சிகள் எல்லாம் அருகாமையில் இருந்த ஒரு கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளன. அந்த மர்ம நபரின் கையில் பச்சை குத்தப்பட்டிருந்தது. அந்த அடையாளத்தை வைத்து அவனை கைது செய்ய புளோரிடா போலீசார் தீவிர தேடுதல் வேட்டை மேற்கொண்டனர்.

இதையடுத்து, டிட்டுஸ்வில்லி பகுதியைச் சேர்ந்த மைக்கேல் ஸ்காஎட் வால்ப் என்ற 35 வயது நபரை இன்று போலீசார் கைது செய்துள்ளனர்.

By

Related Post