Breaking
Thu. Nov 14th, 2024

சிரியா மற்றும் ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ்.களை ஓழிப்பதில் ரஷியா தீவிரமாக உள்ளது. அதற்கான புதிய திட்டத்தை உருவாக்கியுள்ளது.

ஐ.எஸ். களை அழிக்க திறமை வாய்ந்த ‘எலிகள் ராணுவ படை’யை தயார் செய்து வருகிறது. எலிகளுக்கு நுகரும் சக்தி அதிகமாக உள்ளதால் அவற்றை ஐ.எஸ்.தீவிரவாதிகளுக்கு எதிராக ராணுவத்தில் பயன்படுத்த ரஷியா முடிவு செய்துள்ளது.

எலிகளின் மூளையை இணைக்கும் மைக்ரோ சிப் ஒன்றைய சிகிச்சையின் மூலம் அதன் தலைக்கு உள்ளே வைக்கப்படும். இதன் மூலம் எலிகளின் மூளை எவ்வாறு செயல்படுகிறது. தற்போது அது எதனை உணர்கிறது உள்ளிட்ட தகவல்களை அந்த எலிகளை இயக்கும் ராணுவ வீரர்களுக்கு தெரியவரும்.

மோப்ப நாய்களை விட எலிகள் அளவில் சிறியதாக இருப்பதால் அவை எதிரிகளின் எல்லைகளுக்குள் எளிதாக நுழைந்து விட முடியும். இதனால் ஆபத்தை ஏற்படுத்தும் கண்ணி வெடிகள், ஆயுதங்கள் இருந்தால் தங்களுடைய நுகர்வு சக்தி மூலம் ராணுவ வீரர்களுக்கு எலிகள் தெரிவித்து எச்சரிக்கை செய்யும்.

இது போன்று ஒரு மாபெரும் ‘எலி ராணுவ படையை, உருவாக்கி ஐ.எஸ்.களை அழிக்க ரஷிய விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். இருந்தாலும் அதில் ஒரு சிக்கல் உள்ளது. எலிகளின் ஆயுட்காலம் ஒரு வருடம் என்பதால் அதற்கு குறைந்தது 3 மாதங்களில் ராணுவ பயிற்சி அளித்து தயார் படுத்த வேண்டும்.

அதே நேரத்தில் இளமையான மற்றும் வயது முதிர்ந்த எலிகளையும் இந்த சோதனையில் ஈடுபடுத்த முடியாது. ரஷியாவின் ரோஸ்டவ் – ஆன் – டன் நகர அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் இந்த திட்டத்தில் இரவு பகலாக உழைத்து வருகின்றனர்.

இத்தகைய பயிற்சி அளிக்கப்படும் எலிகளை எதிரிகளை வீழ்த்த மட்டுமின்றி மக்களை காப்பாற்ற முடியும். உதாரணமாக, பூகம்பம் ஏற்பட்டு கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி கிடப்பவர்களை சிதறி கிடக்கும் கற்களுக்கு இடையே புகுந்து சென்று அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா என எலிகளின் நுகர்வு சக்தி மூலம் மீட்பு குழுவினர் கண்டுபிடிக்க முடியும்.

alalam_635875950807666186_25f_4x3

Russian President Release Engineered Army of Rats in Fight against ISIS

alalam_635875950951190537_25f_4x3

By

Related Post