Breaking
Mon. Dec 23rd, 2024

அர­சி­ய­ல­மைப்பு 19 ஆவது தட­வை­யா­கவும் திருத்தம் செய்­யப்­பட்­டுள்ள நிலையில் ஜனா­தி­ப­தியின் கணி­ச­மான அதி­கா­ரங்கள் குறைக்­கப்­பட்­டுள்­ளன. அதனால் ஜனா­தி­ப­தியின் கூற்­றுக்­களை ஆலோ­ச­னை­க­ளாக மாத்­தி­ரமே எடுத்­துக்­கொள்ள வேண்டும் என்­ப­தோடு பிர­த­மரின் கருத்­துக்­க­ளையே நடை­மு­றைக்கு சாத்­தி­யப்­படும் விட­யங்­க­ளாக கருத வேண்டும் என நவ சம­ச­மாஜ கட்­சியின் தலைவர் கலா­நிதி விக்­கி­ர­ம­பாகு கரு­ணா­ரட்ன தெரி­வித்தார்.

யுத்­தக்­குற்ற விசா­ரணை நீதி­மன்றம் அமைப்­பது தொடர்பில் அர­சாங்கம் அவ­சரம் காட்­டாது என்ற ஜனா­தி­ப­தியின் கருத்து தொடர்பில் வின­வி­ய­போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­த­ாவது.

நேற்­றைய தினம் இந்­திய ஊட­க­மொன்­றுக்கு ஐக்­கிய நாடுகள் சபையின் தீர்­மா­னங்­களை அமுல்­ப­டுத்தல் தொடர்பில் கருத்து தெரி­விக்கும் போது யுத்­தக்­குற்ற விசா­ரணை நீதி­மன்­றத்தை அமைப்­பது தொடர்பில் அர­சாங்கம் அவ­சரம் காட்­டாது என குறிப்­பிட்­டுள்ளார்.

யுத்தக் குற்றம் இடம் பெற்­றுள்­ளமை தொடர்பில் முறையான மதிப்­பீ­டுகள் இடம் பெற்ற பின்­னரே குறித்த விவ­காரம் தொடர்­பிலும் ஏனைய அதி­கார பகிர்வு தொடர்­பிலும் தீர்­வுகள் ஆரா­யப்­படும் என்றும் குறிப்­பிட்­டுள்ளார்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இவ்­வாறு குறிப்­பி­டு­கையில் மறு­புறம் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தமது விசேட உரையின் போது வடக்கு, கிழக்கு அப்­பாவி தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு இவ்­வ­ருட இறு­திக்குள் தீர்வு காணப்­படும் என்றும் கூறியுள்ளார். நாட்டில் 19 ஆவது திருத்தச் சட்டம் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது.

இதன் போது ஜனா­தி­ப­தியின் இணக்­கப்­பாட்­டுடன் அவரின் அதி­கா­ரங்கள் கணி­ச­மான அளவு குறைக்­கப்­பட்­டன. இவ்­வா­றி­ருக்க தற்­போது ஜனா­திபதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வினால் வெளி­யி­டப்­படும் கருத்­துக்கள் அனைத்தும் ஆலோ­ச­னை­க­ளா­கவே அமையும் என்­பதில் மாற்­றுக்­க­ருத்து எமக்கு இல்லை.

அவை நடை­மு­றையில் சாத்­தி­ய­மா­காது என்­பதும் வெ ளிப்­ப­டை­யான கார­ணி­யாகும். அதனால் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் உத்­தி­யோ­க­பூர்வ அறி­விப்புக்­களே நடை­மு­றைக்கு சாத்­தி­ய­மாக அமையும் என்றார்.

By

Related Post