அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளருக்கு போட்டியிட்டுள்ள ஹிலாரி கிளிண்டன், பறக்கும் தட்டு குறித்த மர்மத்தின் உண்மையை உலகுக்கு வெளிப்படுத்துவேன் என்று உறுதியளித்துள்ளார்.
அமெரிக்காவில் வரவிருக்கின்ற ஜனபாதிபதி தேர்தலில், ஜனநாயக கட்சி சார்பாக ஹிலாரி கிளிண்டன் வேட்பாளராக போட்டியிடுகிறார்.
தேர்தல் குறித்த பிரசாரங்களில் ஈடுபட்டு வரும் இவர், பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகிறார்.
இதில் ஒரு வாக்குறுதியாக, நான் அமெரிக்காவின் ஜனாதிபதியானால், பறக்கும் தட்டும் குறித்த உண்மையை வெளிப்படுத்துவேன் என்று கூறியுள்ளார்.
அமெரிக்காவில் 77 சதவீதம் மக்கள், வேற்றுகிரகவாசிகள் பூமிக்கு வந்துள்ளனர் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர், இதுகுறித்து அமெரிக்க அரசாங்கமும் ஆராய்ச்சி மேற்கொண்டாலும், பல தசாப்தங்களாக உண்மை மறைந்து கிடக்கிறது.
இந்நிலையில், Behind Area 51 (பூமியில் மறைந்து கிடக்கும் மர்மங்கள்) பற்றி உண்மைகளை கண்டறிந்து வெளிப்படுத்துவேன் என ஹிலாரி உறுதியளித்துள்ளது அரசியல் உலகிலும், அறிவியல் உலகிலும் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.