Breaking
Fri. Nov 22nd, 2024
தொழில் நிமித்தம் வெளிநாடு சென்ற பெண் ஒருவருக்கு போலி குடும்பப் பின்னணி அறிக்கையைத் தயாரித்து வழங்கிய அபிவிருத்தி அதிகாரி, ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சிறப்பு விசாரணை பிரிவினரால் குறித்த அதிகாரி  கைது செய்யப்பட்டுள்ளார்.
ரம்பேவ பிரதேச செயலாளர் காரியாலயத்தில் சேவையாற்றும் அபிவிருத்தி அதிகாரியே, இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
மூன்று வயதுடைய குழந்தை ஒன்றின் தயாருக்கு போலியான குடும்பப் பின்னணி அறிக்கையை தயாரித்து, அவரை கடந்த வருடம் ஜூன் மாதம் வெளிநாட்டுக்கு அனுப்பி குற்றச்சாட்டின் பேரிலேயே குறித்த அபிவிருத்தி அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

By

Related Post