நாட்டில் தற்போது அதிகரித்து வரும் வீதி விபத்துக்கள் காரணமாக நாௌான்றுக்கு ஏழு பேர் உயிரிழப்பதாக பொலிஸ் போக்குவரத்து பிரிவின் தலைமையகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தோடு நா.ௌான்றுக்கு 101 வீதி விபத்துக்கள் பதிவாகி வருவதையும் ஒருங்கே சுட்டிக்காட்டியுள்ளது.
நாடளாவிய ரீதியில் கடந்த ஆண்டில் மாத்திரம் 36,894 வீதிவிபத்துக்களில் 2,771 பேர் உயிரிழந்துள்ளனர். 7,719 பேர் பாரதூரமான காயங்களுக்குள்ளாகியுள்ளனர். இதுவரை காலங்களில் கடந்த ஆண்டான 2015 ஆம் ஆண்டிலேயே அதிகமான வீதி விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாக வரலாற்றில் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸ் போக்குவரத்து பிரிவின் தலைமையகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் நவம்பர் 31 ஆம் திகதி வரையில் இடம்பெற்ற விபத்துக்களில் மோட்டார் சைக்கிள் விபத்துக்கள் 9,329 என்ற எண்ணிக்கையில் அதிகமாக பதிவாகியுள்ளன. இதனையடுத்து, முச்சக்கர வண்டிகள் மூலம் 6,301 விபத்துக்கள் பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அதிகமான வீதி விபத்துக்களை ஏற்படுத்திய சாரதிகள் 31 வயதிற்கும் 35 வயதிற்கும் இடைப்பட்டவர்களாக இருப்பதோடு இவர்கள் மூலம் 5,349 விபத்துக்கள் பதிவாகியுள்ளன. அதிக விபத்துக்களுக்கு 31-35 வரையான சாரதிகளே பொறுப்புக் கூறவேண்டியவர்கள் எனவும் இவர்களால் ஏற்பட்ட விபத்துக்கள் 5349 ஆக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.