Breaking
Fri. Sep 20th, 2024
நாடு முழுவதும் டெங்கு நுளம்பு பெருகும் அபாயம் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் 837 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் விசேட வைத்திய நிபுணர் ப்ரஷீலா சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
இதில் அநேகமான நோயாளர்கள் கொழும்பு, யாழ்ப்பாணம், கண்டி மற்றும் கேகாலை மாவட்டங்களிலேயே பதிவாகியுள்ளனர். கடந்த வருடத்தின் இறுதி மூன்று மாதங்களுக்குள் வட பகுதியில் டெங்கு நோயாளர்கள் அதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கல்முனை மாவட்டத்தில் இந்த வருடத்தில் மாத்திரம் 11 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். யாழ்ப்பாணத்தில் 83 நோயாளர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக டொக்டர் ப்ரஷீலா சமரவீர தெரிவித்துள்ளார்.
இதனால் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இன்று (11) முதல் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பும் அவசியம் எனவும் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் விசேட வைத்திய நிபுணர் ப்ரஷீலா சமரவீர குறிப்பிடுகின்றார்.

By

Related Post