Breaking
Mon. Dec 23rd, 2024

கொஸ்­வத்தை பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட வீடொன்றில் இயங்கி வந்த சூதாட்ட நிலையம் ஒன்று பொலி­ஸா­ரினால் சுற்­றி­வ­ளைக்­கப்­பட்­டுள்­ளது. கொஸ்­வத்தை பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட போத்­த­லே­கம பிர­தேச வீடொன்றில் மிகவும் இர­க­சி­ய­மான முறையில் நடத்திச் செல்­லப்­பட்ட சூதாட்ட நிலை­யமே இவ்­வாறு பொலி­ஸாரின் முற்­று­கைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

இந்­ந­ட­வ­டிக்­கையின் போது அவ்­வீட்டில் சூதாட்­டத்தில் ஈடு­பட்­டி­ருந்த எட்டுப் பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­தனர். இவர்கள் நீண்ட நாட்­க­ளாக இவ்­வாறு இந்த சட்­ட­வி­ரோத செயலில் ஈடு­பட்டு வந்­தி­ருப்­ப­தா­கவும், வெளி­யி­டங்­க­ளி­லி­ருந்து வரு­ப­வர்­களும் இங்கு சூதாட்­டத்தில் ஈடு­ப­டு­வ­தா­கவும் அவர்­க­ளிடம் மேற்­கொண்ட விசா­ர­ணை­க­ளி­லி­ருந்து தெரி­ய­வந்­தி­ருப்­ப­தா­கவும் பொலிஸார் தெரி­வித்­தனர்.

By

Related Post