Breaking
Fri. Nov 22nd, 2024

கூட்டு எதி­ரணி என்ற நாமத்தில் நாட்டை கூட்­டாக அழித்­தொ­ழிக்கும் கும்­பலில் இருந்து ஒரு குழு­வினர் விரைவில் அர­சாங்­கத்தில் இணை­ய­வுள்­ளனர். புதிய அர­சி­ய­ல­மைப்­பினை நிறை­வேற்­று­வ­தற்­காக மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்மை ஏற்­க­னவே எமது கைவசம் உள்­ளது.

எனினும் நாட்டின் அபி­வி­ருத்­தியை கருத்திற் கொண்­டே­ எம்­முடன் கூட்டு எதி­ர­ணி­யினர் இணை­ய­வி­ருப்­ப­தாக வீட­மைப்பு மற்றும் நிர்­மா­ணத்­துறை அமைச்­சரும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் பிரதித் தலை­வ­ரு­மான சஜித் பிரே­ம­தாஸ தெரி­வித்தார்.

நல்­லாட்சி அர­சாங்­கத்தின் வேலைத்­திட்­டத்தை முழு­மை­யாக எதிர்த்து வரும் கூட்டு எதி­ர­ணி­யினர் எமது ஆட்­சி காலை­வாரும் நாளை கணக்­கிட்டு கொண்­டி­ருப்­ப­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.

அம்­பாந்­தோட்டை திஸ்­ஸ­ம­க­ராம பிர­தே­சத்தில் குடிநீர் திட்­டத்­திற்­கான அடிக்கல் நாட்டி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அமைச்சர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அமைச்சர் சஜித் பிரே­ம­தாஸ மேலும் உரை­யாற்­று­கையில்,

அம்­பாந்­தோட்­டையில் வாழும் அப்­பாவி பிர­தேச மக்கள் சுத்­த­மான குடி­நீ­ரின்றி அவ­தி­யுற்­றனர். இதன்­போது கணக்­கெ­டுப்பார் எவரும் இருக்­க­வில்லை. இது தொடர்பில் பலர் என்­னிடம் முறை­யிட்­டுள்­ளனர். திஸ்­ஸ­ம­க­ராம மக்கள் அருந்தும் குடி­நீரை அமைச்­ச­ர­வை­யிலும் பாரா­ளு­மன்­றத்­திலும் போத்­தலில் கொண்டு சென்று காண்­பித்தேன். இதன்­பின்­னரே குடிநீர் பிரச்­சி­னைக்கு தீர்வு கிட்­டி­யது. முன்­னைய ஆட்­சி­யாளர் இது குறித்து ஒரு தட­வை­யேனும் சிந்­திக்­க­வில்லை.

இத்­த­கைய நிலையில் அப்­பாவி மக்­களின் பிரச்­சி­னை­களை கண்­ட­றி­யாது நல்­லாட்சி அர­சாங்­கத்தின் வேலைத்­திட்­டத்­திற்கு பாரிய எதிர்ப்­பினை கூட்டு எதி­ர­ணி­யினர் முன்­வைத்த வண்­ண­முள்­ளனர்.

கூட்டு எதி­ரணி என்ற நாமத்தை கொண்­டி­ருப்­ப­வர்கள் நாட்டை கூட்­டாக அழிப்­ப­தற்கே சதி செய்து வரு­கின்­றனர். நல்­லாட்சி அர­சாங்­கத்தின் காலை­வாரும். நாளை கூட்டு எதி­ர­ணி­யினர் கணக்­கிட்டு வரு­கின்­றனர்.

எவ்­வா­றா­யினும் கூட்டு எதி­ர­ணி­யி­னரின் செயற்­பா­டுகள் ஒரு­பு­ற­மி­ருக்­கையில் , எதி­ர­ணியின் ஒரு குழு­வினர் விரைவில் அர­சாங்­கத்தில் இணை­ய­வுள்­ளனர். புதிய அர­சி­ய­ல­மைப்­பினை நிறை­வேற்றிக் கொள்ளும் நோக்­குடன் , அர­சாங்கம் எதி­ர­ணி­யி­னரை பத­விகள் வழங்கி பல­வந்­த­மாக இணைத்து கொள்­வ­தாக குற்­றம்­சு­மத்­து­கின்­றனர். இது முற்­றிலும் தவ­றான குற்­றச்­சாட்­டாகும். புதிய அர­சி­ய­ல­மைப்­பினை நிறை­வேற்­று­வ­தற்­கான பாரா­ளு­மன்­றத்தின் மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்மை ஏற்­க­னவே அர­சாங்­கத்தின் கைவசம் உள்­ளது. எனினும் நாட்டின் அபிவிருத்தியை கருத்திற் கொண்டே எம்முடன் கூட்டு எதிரணியினர் இணையவுள்ளனர்.

இதன்போது அபிவிருத்தி சார்ந்த பொறுப்புகளை அவர்களிடம் ஒப்படைக்க உள்ளோம். நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான பூரண ஒத்துழைப்பினை எதிரணியிலிருந்து வரவுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் வழங்கியுள்ளனர் என்றார்.

By

Related Post