Breaking
Sun. Jan 12th, 2025

– ஜவ்பர்கான் –

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள காத்தான்குடியில் இன்று (26) அதிகாலை இரண்டு பலசரக்கு விற்பனை நிலையங்கள் உடைக்கப்பட்டு அங்கிருந்த பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

காத்தான்குடி மத்திய வீதியிலுள்ள பலசரக்கு விற்பனை நிலையமும் காத்தான்குடி அரபிக்கலாசாலை வீதியிலுள்ள பலசரக்கு விற்பணை நிலையமும் உடைக்கப்பட்டு அங்கிருந்த சில பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.

இது தொடர்பாக அதன் உரிமையாளர்கள் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதையடுத்து, காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக காத்தான்குடி பொலிஸார் குறிப்பிட்டனர்.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன் காத்தான்குடி கபுறடி வீதி மற்றும் காத்தான்குடி மெத்தைப்பள்ளி வீதி ஆகிய வீதிகளில் இரண்டு பலசரக்கு விற்பனை நிலையங்கள் உடைக்கப்பட்டு அங்கிருந்து பணம் கொள்ளையிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post