இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்ட ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இன்று பிற்பகல் விசேட விமானம் மூலம் இலங்கையை வந்தடைந்தாhர்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த வருடம் மார்ச் மாதம் ஜப்பானுக்கு சென்றிருந்த போது விடுத்த அழைப்பிற்கு அமைய ஜப்பான் பிரதமர் உள்ளிட்ட தூதுக்குழுவினர் இலங்கை வந்தனர்.
கட்டுநாயக்க வானூர்தி தளத்தின் இரண்டாவது பயணிகளுக்கான கட்டமைப்பை திறந்து வைக்கும் நிகழ்விலும் அவர் கலந்து கொண்டார்.
இதனிடையே, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே மற்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இடையில் இருதரப்பு கலந்துரையாடல் ஒன்றும் இன்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது, குறித்த கட்டமைப்பின் மாதிரி கட்டமைப்பை ஜனாதிபதியும், ஜப்பான் பிரதமரும் பார்வையிட்டனர்.
நாடாளுமன்ற கட்டிடத்திற்கு விஜயம் செய்த ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே அங்கு ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இதனையடுத்து கொழும்பில் பிரதான விருந்தகமொன்றில் நடைபெறும் ஜப்பான் – இலங்கை வர்த்தக சந்திப்பு ஒன்றிலும் கலந்துகொண்டார்.
இலங்கை முதலீட்டு சபை மற்றும் ஜப்பான் மிஷ{ஹோ வங்கிக்கு இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையும், ஜப்பான் பிரதமரின் விஜயத்தின் ஒரு கட்டமாக கைச்சாத்திடப்பட்டுள்ளது.