பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதை எதிர்த்து தேரர்கள் சிலர் ஹோமாகம நீதவான் நீதிமன்றம் வளாகத்துக்குள் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டம் சட்டத்துக்கு முரணானது என்றும், இதனால், பௌத்தனாக தான் வெட்கப்படுவதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, கலகொட அத்தே ஞானசார தேரர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட விடயம் தொடர்பில் மல்வத்தை பீடாதிபதி மற்றும் கோட்டையின் பிடாதிபதி ஆகியோருக்கு அறிக்கை ஒன்றை வழங்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் நீதிமன்றுக்கு மரியாதை செலுத்த வேண்டும். நீதிமன்றின் உத்தரவுகளை நிரைவேற்ற பொலிசாருக்கு பூரண உரிமை உண்டு எனவும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.