Breaking
Mon. Dec 23rd, 2024
கடந்த வருடத்தை விட வாக்காளர்களின் எண்ணிக்கை இந்த வருடம் அதிகரித்துள்ளதாக தேர்தல் ஆணையாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதாவது கடந்த வருடம் வாக்காளர்களின் எண்ணிக்கை 15,421,201 ஆக காணப்பட்டதோடு 2014 ஆம் ஆண்டு இதன் எண்ணிக்கை 15,047,490 ஆக காணப்பட்டதாகவும் தேர்தல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அத்துடன் இந்த வாக்காளர் எண்ணிக்கையில் இந்த வருடம் பாரிய அதிகரிப்பு காணப்படுவதோடு இதன் எண்ணிக்கை 373,712 ஆக அதிகரித்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தேர்தல் பட்டியல் மூலம் இந்த நாட்டில் அதிகமாக வாக்களிக்க தகுதியானவர்கள் இருக்கும் இடமாக கம்பஹா காணப்படுவதாகவும்,1,680,887 வாக்காளர்கள் பதிவு செய்யபட்டிருப்பதாகவும் மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த வருடம் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் பட்டியலின் அடிப்படையில் கொழும்பு மாவட்டத்தில் வாக்களிக்க தகுதியானவர்கள் 1,640,946 என்றும், மிகவும் குறைவான வாக்காளர் பதிவான மாவட்டமாக வன்னி மாவட்டம் காணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

By

Related Post