பெண் பொலிஸார் தங்கும் தங்குமிடத்துக்குள் களாவாக நுழைந்ததாக கூறப்படும் அம்பாறை பொலிஸ் பிரிவின் பொலிஸ் நிலையம் ஒன்றின் பொலிஸ் கான்ஸ்டபிள் தொடர்பில் அம்பாறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் ஊடாக விசேட விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டி.ஆர்.எல்.ரணவீரவின் ஆலோசனைக்கு அமைவாக இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.