Breaking
Fri. Nov 15th, 2024

அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்துடன் 20 வீதத்தை சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அரச நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த 20 வீத கொடுப்பனவு அடுத்த மாதம் முதல் அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்துடன் சேர்க்கப்படவுள்ளது.

கடந்த காலத்தில் அரசாங்க ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவாக வழங்கப்பட்டிருந்த தொகையிலிருந்து 20 வீதத்தை அடிப்படைச் சம்பளத்துடன் சேர்க்கவுள்ளதாக அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜீ.தடல்லகே தெரிவித்தார்.

இதன் பிராகாரம் அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் அதிகரிக்கப்படவுள்ளது.

சம்பள அதிகரிப்பு தொடர்பான சுற்றுநிருபத்தை வௌியிடுவதற்கு அரச நிர்வாக அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அமைச்சின் செயலாளர் மேலும் சுட்டிக்காட்டினார்.

By

Related Post