Breaking
Mon. Dec 23rd, 2024

வடக்கில் புலிகளைக் காட்டி தெற்கிலுள்ளவர்களை தூண்டிவிடுவதற்கும், வெளிநாட்டிலுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ்.  பயங்கரவாதிகளைக் காட்டி இந்நாட்டு முஸ்லிம்களை அச்சமூட்ட முனைவதற்கும் சிலர் முயற்சித்து வருகின்றனர் என ஜாதிக ஹெல உறுமயவின் செயலாளரும் அமைச்சருமான பாட்டளி சம்பிக்க ரணவக்க  தெரிவித்தார்.

“சலகுன” எனும் தனியார் தொலைக்காட்சி உரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் இதனைக் கூறினார்.

இந்த நாட்டை சமஸ்டியாக மாற்றுவதற்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இடமளிக்க மாட்டோம். வடக்கிலுள்ள தமிழர்கள் தெற்கிலுள்ள சிங்களவர்களை ஒதுக்கி தனியாக பிரிந்து நின்று வாழ்வதற்கு நினைப்பது தவறாகும். பிரபாகரனால் அந்த நோக்கத்தை அடைந்து கொள்ள முடியாமல் போனது.

இந்த நாட்டில் முஸ்லிம்களும், மலையகத்திலுள்ள தமிழர்களும் ஏனைய சிங்களவர்களுடன் ஒன்றித்து வாழ்வது போன்று வடக்கு தமிழர்களும் வாழ்வதற்கான தீர்மானங்களை முன்னெடுக்க வேண்டும்.

இந்த நாட்டில் சகல இனங்களும் ஒற்றுமையாக அவரவரது கலாசாரத்தை மதித்து வாழ சுதந்திரம் வேண்டும். கிறிஸ்தவ மக்களுக்கு அன்றைய சிங்கள மன்னர்கள் இடமளித்ததனால் தான் அவர்கள் இன்று நாட்டில் வாழ்கின்றார்கள்.

போத்துக்கேயரிடமிருந்து முஸ்லிம்களை சிங்கள மன்னர்கள் பாதுகாத்ததனால் தான் முஸ்லிம்கள் இன்று இந்நாட்டில் வாழ்கின்றார்கள். எனவே, சிங்களவர்கள் பௌத்த மதத்துக்கு இந்நாட்டில் முன்னுரிமை வழங்குவதென்பது, அடுத்தவர்களுக்கு நல்வாழ்வழிப்பது என்பதையே குறிக்கின்றது எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். D C

By

Related Post