Breaking
Mon. Dec 23rd, 2024
இலங்கையுடனான உறவுகள் மிகச் சிறந்த வகையில் காணப்படுவதாக பாகிஸ்தான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) சயிட் சகீல் ஹூசைன், இரு நாடுகளுக்கும் இடையில் மிகச் சிறந்த உறவுகள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தி மேம்படுத்திக் கொள்ள இரு தரப்பும் அதிக ஆர்வம் காட்டி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தான் புத்திஜீவிகள் குழுவொன்று தற்போது இலங்கைக்கு விஜயம் செய்துள்ளது.
இவ்வாறான இரு தரப்பு விஜயங்கள் நாடுகளுக்கு இடையிலான பரஸ்பர புரிந்துணர்வை மேலும் அதிகரிக்கச் செய்யும் என அவர் தெரிவித்துள்ளார்.

By

Related Post